ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க போகும் தனுஷ் | புஷ்பா 2 படத்தில் பஹத் பாசிலுக்கு கூடுதல் முக்கியத்துவம் | கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் செய்யும் மாற்றம் | நடிகர் சாருஹாசனுக்கு அறுவை சிகிச்சை : சுஹாசினி தகவல் | மகளின் பெயரை அறிவித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | அமரன் படத்தை பாராட்டிய ரஜினி | மிஸ்டர் மனைவி சீரியலை விட்டு விலகிய ஸ்மிருதி | நான் உங்கள் ராஜியாக தொடர்வேன் - ஷாலினி விளக்கம். | இந்திய சினிமாவுக்கு 2024 சிறப்பான தீபாவளியா? | இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜிவி பிரகாஷ்குமார் |
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கும் தனது 61வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித் குமார். வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் அஜித் குமார் ஹீரோ- வில்லன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் அஜித் நடித்து வரும் புதிய கெட்டப்பின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் அஜித் 61வது படத்தில் நாயகியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.