பிளாஷ்பேக் : சமூக கதைகளில் நடிக்க மறுத்த நடிகர் | சித்ரா தற்கொலை வழக்கில் மேல்முறையீடு | தி கோட் Vs லப்பர் பந்து - விஜயகாந்த்தைப் பெருமைப்படுத்தியது எந்தப் படம் ?, | தேவரா - தனித்து முதல் வசூல் சாதனையை படைத்த ஜுனியர் என்டிஆர் | சின்னத்திரையில் ஒரு சினிமா முயற்சி : நெஞ்சத்தைக் கிள்ளாதே அப்டேட் | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய புகழ் | பிக்பாஸில் விஜய்சேதுபதி? - விக்ரமன் கூறிய கருத்து | சீரியலிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது - சதீஷ் | எதிர்பார்ப்பில் அடுத்தடுத்து சில படங்கள், என்னென்ன ? | அற்புதமான பெண்ணை பெற்ற நான் ஒரு அதிர்ஷ்டசாலி : பூஜா குமார் வெளியிட்ட பதிவு |
தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை மஞ்சு வாரியர், அதையடுத்து துணிவு, வேட்டையன் படங்களில் நடித்துள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில், அசுரன் படத்தில் நடிக்க தனுஷ் அழைத்தார். வெற்றிமாறன் சொன்ன கதை பிடித்ததால் அப்படத்தில் நடித்தேன். அதன் பிறகு அஜித்துடன் துணிவு படத்தில் நடிக்க வேண்டும் என்று எச்.வினோத் அழைத்த போது மிகவும் ஆர்வத்துடன் நடித்தேன். இந்த படங்களை தொடர்ந்து தன்னுடைய படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஞானவேல் அழைத்தார். ஏற்கனவே அவர் இயக்கிய ஜெய்பீம் படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன். அதனால் உடனடியாக அவர் படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தேன். அந்த படத்தில் ரஜினி நடிக்கிறார் என்று அவர் சொன்ன போது மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ் சினிமாவில் வந்த வேகத்திலேயே ரஜினி, அஜித், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை ஒரு மிகப் பெரிய பம்பர் பரிசாக கருதுகிறேன் என்று கூறியிருக்கிறார்.