'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் | வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே | பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” |
தெலுங்கு திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் பயணித்து வருபவர் நடிகர் மோகன்பாபு. இவருக்கு ஜலபள்ளி என்கிற கிராமத்தில் சொந்த வீடு இருக்கிறது. கடந்த 22ம் தேதி மோகன்பாபுவின் செகரட்டரி திருப்பதியில் இருந்து தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்த வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த 10 லட்சம் ரூபாய் தொகையை அங்கிருந்து அறை ஒன்றில் வைத்துள்ளார். ஆனால் மறுநாள் காலை பார்க்கும்போது அவருடைய அறையில் இருந்து அந்த பணம் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவர் போலீசாரிடம் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அங்கே பணியாற்றிய கணேஷ் நாயக் என்கிற பணியாளரின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு இடம் அளிப்பதாக உணர்ந்தனர். மேலும் சில ஆதாரங்களை திரட்டி அவரை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார் திருப்பதியில் வைத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7.3 லட்சம் ரூபாய் தொகையையும் கைப்பற்றினர். மோகன்பாபு வீட்டில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.