சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தெலுங்கு திரையுலகின் மறைந்த மூத்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவின் நூறாவது பிறந்தநாள் சமீபத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மகேஷ்பாபு, ராம்சரண் உள்ளிட்ட இளம் முன்னணி நடிகர்களும் கூட இந்த விழாவில் தவறாமல் கலந்து கொண்டனர். அந்தவகையில் அந்த விழாவில் வில்லன் நடிகர் மோகன் பாபு மற்றும் குணச்சித்திர நடிகை ஜெயசுதாவும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். மேடையேறி பேசிக்கொண்டிருந்த பிரபலங்கள் அனைவரும் நாகேஸ்வரராவின் பெருமைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது அதை மோகன்பாபு சீரியஸாக கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கு இடைஞ்சல் செய்வது போல அருகில் இருந்த ஜெயசுதாவின் செல்போன் தொடர்ந்து ஒலிப்பதும் பின்னர் ஜெயசுதா அடிக்கடி தொடர்ந்து செல்போனில் உரையாடுவதுமாக இருந்தது.
ஒரு கட்டத்தில் இது மோகன்பாபுவை எரிச்சலுட்டியது, இதனைத் தொடர்ந்து படக்கென ஜெயசுதாவின் செல்போனை அவரிடம் இருந்து பறித்த மோகன்பாபு, நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி கவனிக்குமாறு அவரிடம் கூறியுள்ளார். மோகன்பாபுவின் இந்த செயலால் முதலில் ஜெயசுதா அதிர்ச்சி அடைந்தாலும் அதன்பிறகு அவர் காமெடியாக தான் இதை செய்தார் என்பதை உணர்ந்து கொண்டு நிகழ்ச்சியை கவனிக்க ஆரம்பித்தார்.
இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது போன்று முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது பிரபலங்களாக இருந்தாலும் தங்களது செல்போனை அணைத்து வைத்துவிட்டு நிகழ்ச்சியை கவனிக்க வேண்டும், மோகன் பாபு சரியாக தான் செய்திருக்கிறார் என கூறினாலும் ஒரு சிலரோ மோகன்பாபுவின் இந்த செயல் ஏற்புடையதல்ல என்றும் கூறி வருகிறார்.




