ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படம் குறித்த அறிவிப்பு கடந்து சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த படத்திற்காக வெளியிடப்பட்ட டீசரும் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளது. கடந்த மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க வேண்டிய நிலையில் ஒரு சிறிய தாமதத்திற்கு பிறகு இன்று முதல் ஐதராபாத்தில் இந்த படத்தில் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
இதற்காக சென்னையிலிருந்து நேற்று கிளம்பி ஐதராபாத் விமான நிலையம் வந்தார் ரஜினிகாந்த். பிரபல தெலுங்கு சீனியர் நடிகரும் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான மோகன்பாபு விமான நிலையத்திற்கு நேரில் வந்து ரஜினிகாந்தை வரவேற்று தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.




