சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை | 'சூது கவ்வும் 2' : ஹரிஷா ஜஸ்டின் முதல் படம் 13ம் தேதி வெளியாகிறது |
'குக்கூ' படத்தில் இயக்குனராக அறிமுகமானாலும் 'ஜோக்கர்' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நன்கு அறிமுகமானவர் இயக்குனர் ராஜூ முருகன். அந்தப் படம் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.
அதற்குப் பிறகு அவர் இயக்கிய 'ஜிப்ஸி, ஜப்பான்' ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன. குறிப்பாக கார்த்தியின் மார்க்கெட்டை அதல பாதாளத்திற்குத் தள்ளியது 'ஜப்பான்'. அதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என அடுத்த படங்களை நம்பியிருக்கிறார் கார்த்தி.
'ஜப்பான்' படத்திற்குப் பிறகு சில ஹீரோக்களிடம் கதை சொல்லியிருக்கிறார் ராஜூ முருகன். ஆனால், யாரும் சரியான பதிலளிக்கவில்லை என்கிறார்கள். இந்நிலையில் சசிகுமார் அவருக்குக் கை கொடுத்திருக்கிறார்.
ராஜூ முருகன் இயக்க சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும்அந்தப் படம் ஆரம்பமாகி படப்பிடிப்பு நடந்து வருகிறது. 'ஜிப்ஸி' படத்தைத் தயாரித்த திமுக எம்எல்ஏ அம்பேத் குமார் தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 'ஜிப்ஸி'யில் விட்டதை இதில் மீட்பார்களா என்றுதான் கோலிவுட்டும் எதிர்பார்க்கிறது.