கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? |

சசிகுமார் நடித்து கடந்த ஆண்டில் வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. 7 கோடியில் தயாரான இப்படம் 90 கோடி வசூலித்தது. அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அதையடுத்து 'ஜோக்கர், குக்கூ' என சில படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கத்தில் 'மை லார்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார் சசிகுமார்.
இப்படத்தில் அவருடன் சைத்ரா ஜே. அச்சர், ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் பாடல்கள், டிரைலர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது 'மை லார்ட்' படம் வருகிற பிப்ரவரி 13ம் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் சமூக பிரச்னைகளை பேசும் குடும்ப கதையில் உருவாகியுள்ளது.