'ஜனநாயகன்' லீக் : நாயகி தெரிவித்த கண்டனம், நாயகன் விஜய் அமைதி ஏன்? | இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் | மாமியாருக்கு பாய் பிரண்டு தேடும் சமீரா ரெட்டி | ஜனநாயகன் லீக் விவகாரம் ; தள்ளி வைக்கப்பட்ட சிரஞ்சீவி பட பூஜை | வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2' | 2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ் | 'ஜனநாயகன்' லீக் : பல நடிகர்கள் வேண்டுகோள், நடவடிக்கை எடுக்கப்படுமா? | ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த் | சிக்ஸ் பேக் உடன் தயாராகும் தனுஷ் மகன் : ஜி.வி.பிரகாஷ் தந்த அப்டேட் | 'பெத்தி' படத்தில் இளம் நாயகி? |

நடிகர் தனுஷ் தற்போது போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' எனும் படத்தில் நடித்துள்ளார் . வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மமிதா பைஜூ , கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ் , ஜெயராம், சுராஜ் வென்ஜரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது மேடையில் தனுஷ், ஐசரி கணேஷ் இருவரும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது மேடையில் ஐசரி கணேஷ் 'கர' படம் ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது என சர்ப்ரைஸ் ஆக அறிவித்துள்ளார்.