ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்த 'கல்கி 2898 ஏடி' படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்திற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அங்கு படம் வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே 14 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 110 கோடி. மிக விரைவாக இந்த சாதனையை இந்தப் படம் படைத்துள்ளதாக அமெரிக்க வினியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படம் உலக அளவில் 700 கோடி வசூலைக் கடந்துள்ளது. 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' படங்களைப் போல இந்தப் படமும் 1000 கோடி வசூலைக் கடக்குமா என்ற எதிர்பார்ப்பு தெலுங்குத் திரையுலகினரிடம் எழுந்துள்ளது.
தமிழகத்திலும் இப்படம் 28 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டது. ஹிந்தியிலும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.




