சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூன் 5) ஐதராபாத்தில் ஆரம்பமானது. இதற்காக நேற்று ஐதராபாத் சென்றார் ரஜினிகாந்த்.
அங்கு இப்படத்திற்காக பிரம்மாண்ட அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாம். அந்த அரங்கில்தான் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்திய அளவில் பிரபலமானார்.
லோகேஷ், ரஜினிகாந்த் இணையும் படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க விருப்பப்பட்டார். ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் நடக்கவில்லை.
சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் படங்களில்தான் ரஜினிகாந்த் அதிகம் நடிக்க விரும்புகிறார். கார்த்திக் சுப்பராஜ், நெல்சன், தசெ ஞானவேல் ஆகியோரை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படம் ரஜினியின் 171வது படம்.
அவரது 172வது படமாக 'ஜெயிலர் 2' அல்லது கார்த்திக் சுப்பராஜ் படம் உருவாகலாம் எனத் தெரிகிறது.