சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'சலார்'. இரண்டாவது பாகமான 'சலார் 2' படத்தின் படப்பிடிப்பு இப்போதைக்கு ஆரம்பமாகாது என கடந்த சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளிவந்தது.
ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்க பிரசாந்த் நீல் போய்விடுவார். அதனால், 'சலார் 2' படம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டது என்றும் சொன்னார்கள். இந்நிலையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் முதல் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாம் பாகத்திற்காக ஏற்கனெவே 20 சதவீத படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாம். இதன் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டு பின்னர்தான் ஜூனியர் என்டிஆர் படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம் பிரசாந்த் நீல்.
2025ம் ஆண்டில் 'சலார் 2' வெளியாக உள்ளது.