'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

நடிகர் பிரபாஸின் விருந்தோம்பல் பற்றி பல பிரபலங்கள் தங்களது அனுபவங்கள் குறித்து கூறியுள்ளனர். நடிகர் சூர்யா ஒருமுறை பிரபாஸின் வீட்டிற்கு சென்றபோது அவர் அளித்த விருந்து குறித்து சிலாகித்து பேசியது குறிப்பிடத்தக்கது. வீட்டிற்கு வருவருபவர்களுக்கு மட்டும் அல்ல படப்பிடிப்பு தளத்திலும் பிரபாஸ் இதுபோன்று படக்குழுவிற்கு சர்ப்ரைஸ் விருந்து அளிப்பதில் விருப்பம் உள்ளவர் என்று சமீபத்தில் அவருடன் ஆதிபுருஷ் படத்தில் இணைந்து பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “மும்பையில் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஒருநாள் காலையிலிருந்து மிக நீண்ட நேரம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல நாட்களாக மும்பை உணவுகளை சாப்பிட்டு படக்குழுவினர் சலிப்படைந்திருந்தனர். அதை உணர்ந்த பிரபாஸ் இன்று இரவு நான் சென்னை ஸ்டைல் உணவை வரவழைத்து உங்களுக்கு விருந்து அளிக்கிறேன் என்று படக்குழுவினரிடம் கூறினார். அவர் சொன்னது மும்பையில் இருக்கும் ஏதோ ஒரு சென்னை சம்பந்தப்பட்ட ஹோட்டல் ஒன்றில் உணவை வரவழைக்கப் போகிறார் என்று தான் அனைவரும் நினைத்தார்கள்
ஆனால் மாலை ஆனதும் நேரம் செல்ல செல்ல உணவு வர தாமதமான போது அவரிடம் விசாரித்த பின்னர்தான் அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக உணவை வரவழைத்து இருக்கிறார் என்கிற தகவல் தெரியவந்ததும் படக்குழுவினர் அனைவரும் ஆச்சரியப்பட்டு போனார்கள். அதன்பிறகு கொஞ்ச நேரத்தில் உணவு வந்ததும் அனைவருக்கும் தன் கையாலேயே பரிமாறி மகிழ்ச்சியுடன் விருந்து அளித்தார் பிரபாஸ்: என்று கூறியுள்ளார்.




