பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை சமந்தா, அந்த நோயுடன் போராடி மீண்டு வந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் பாலிவுட் நடிகை ஹினா கான் என்பவர், மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டார். ‛இந்த நோயை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக இதிலிருந்து நான் முழுமையாக குணம் அடைந்து வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது' என்று தெரிவித்து இருந்தார் ஹினா.
இதையடுத்து சமந்தா அவருக்கு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ‛‛நீங்கள் ஒரு போராளி. உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்'' என்று அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் சில வாசகங்களை பதிவிட்டிருந்தார்.
அதற்கு நன்றி தெரிவித்த ஹினா கான், ‛‛நீங்கள் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். உங்கள் மீது வீசப்பட்ட அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் எதிர் கொண்டவிதம் ஆச்சரியம் அளிக்கிறது. உங்களது அன்பான வாழ்த்துக்கு நன்றி. நான் கண்டிப்பாக இந்த நோயிலிருந்து மீண்டு வருவேன்'' என்று பதிவிட்டு இருக்கிறார்.