அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா |

'காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துள்ளவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டு கடந்த வருடம் அவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகியுள்ளார். இருப்பினும் செலெக்ட்டிவான படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய பெயரில் மோசடி நபர் ஒருவர் வாட்ஸ் அப் மூலமாக பலரை ஏமாற்றும் நோக்கில் குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அதிதி.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ள அதிதி ராவ் ஹைதரி, “பலருக்கும் என்னுடைய புகைப்படத்தை புரொபைல் ஐடி ஆக வைத்து என் பெயரை பயன்படுத்தி யாரோ ஒரு நபர் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறார். குறிப்பாக தன்னை வைத்து போட்டோஷூட் நடத்திக் கொள்ளலாம் என்பது போல சில ஆபர்களை தந்து மெசேஜ் அனுப்பி வருகிறார். ஆனால் அது நான் அல்ல. நான் ஒருபோதும் இதுபோன்று யாரிடமும் கூற மாட்டேன். அது மட்டுமல்ல என்னுடைய எந்த ஒரு பர்சனல் போன் நம்பரையும் வேலைகளுக்காக பயன்படுத்த மாட்டேன். எல்லாமே என்னுடைய குழுவினர் மூலமாகத்தான் நடக்கும்.. தயவு செய்து இதை கண்டு யாரும் ஏமாற வேண்டாம்” என ரசிகர்களுக்கும் திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் எச்சரிக்கை அளிக்கும் விதமாக அந்த பதிவில் கூறியுள்ளார் அதிதி ராவ் ஹைதரி.