மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

சூர்யா நடித்து வெளிவந்த 'கங்குவா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஹிந்தி நடிகை திஷா பதானி. அவருக்கு உத்தரபிரதேச மாநிலம் பரேலி-யில் வீடு உள்ளது. நேற்று இரவு அவரது வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்து சாமியார்கள் பிரேமானந்த் மகாராஜ், அனிருத்தாச்சார்யா மகாராஜ் ஆகியோர் குறித்து திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி தெரிவித்த கருத்துக்களால் இது நிகழ்ந்ததாகத் தெரிகிறது. தாங்கள்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என ரோகித் கோல்டி பிரார் குரூப் அதற்கு பொறுப்பேற்றுள்ளது.
மேலும் இது குறித்து அவர்கள் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், திஷா பதானி, அவரது சகோதரி சனாதன தர்மத்தை இழிவுபடுத்த முயன்றார். நமது தெய்வங்களின் அவமானத்தை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இது வெறும் டிரைலர்தான். அடுத்த முறை அவர் அல்லது அவரது வீட்டில் உள்ள ஒருவரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். இந்த செய்தி அவருக்கு மட்டுமல்ல திரைப்படத் துறையின் அனைத்து கலைஞர்களுக்கும் தான். எதிர்காலத்தில் இப்படி நம் மதம் பற்றி அவமானமாகப் பேசினால் அதன் விளைவுகளுக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
குஷ்பு பதானி இந்திய ராணுவத்தில் 10 வருடங்கள் பணியாற்றியவர். மேஜர் ஆக இருந்தவர். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் உடல்நலன் சார்ந்த கோச் ஆகவும் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.
லிவ் இன் உறவு பற்றி அனிருத்தாச்சார்யா தெரிவித்த கருத்துக்கு எதிராக வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.