ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா தனது 55 வது பிறந்தநாளை மார்க் ஆண்டனி படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்போது எஸ்.ஜே. சூர்யா கேக் வெட்டும் போது, வில்லன் நடிகரின் பிறந்தநாள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட டம்மி துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டு துப்பாக்கி குண்டுகள் முழங்க எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார்கள் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர். மார்க் ஆண்டனி படத்தை அடுத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கேம் சேஞ்சர் உள்பட பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.