2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நடிகை மகிமா நம்பியார் தமிழ் மற்றும் மலையாளத்தில் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து, ரசிகர்களிடம் ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றவர். இந்த வருடத்தில் மலையாளத்தில் அவர் நடித்த ப்ரொமான்ஸ் என்கிற படம் வெளியானது. தமிழில் சூரியின் நடிப்பில் உருவாகி வரும் 'மண்டாடி' மற்றும் சத்திய சிவா இயக்கத்தில் தமிழில் உருவாகும் 'பெல் பாட்டம்' பட கன்னட ரீமேக்கிலும் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் சமீப காலமாகவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சில யுடியூப் சேனல்களிலும் தன்னை பற்றி தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்து பலர் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருவதை குறித்து தனது எதிர்ப்பை சோசியல் மீடியா பக்கம் மூலமாக தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
“இதுநாள் வரை இது போன்றவர்களை நான் அமைதியாக பொறுமையுடன் சகித்துக் கொண்டேன். ஆனால் இனிமேல் அப்படி இருக்கப் போவதில்லை. நான் உங்களுடைய பர்சனல் விஷயங்களில் தலையிட போவதில்லை. அதே போல என்னுடைய விஷயங்களை நீங்களும் தலையிட வேண்டாம். ஒருவேளை இதை நீங்கள் மீறினால் நிச்சயமாக அப்படி என் மீது அவதூறு கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இதுவே என் கடைசி எச்சரிக்கை” என்று கூறியுள்ளார்.