தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சாய் பல்லவி மற்றும் அவரது தங்கை இருவரும் சுற்றுலா சென்ற இடத்தில் பிகினி உடையுடன் கடற்கரையில் அமர்ந்திருப்பது, சுற்றி தருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாட்டு சுற்றுலா என்றாலும் கூட சாய் பல்லவி இந்த மாதிரி உடை அணிவாரா என பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, “இதுதான் நாங்கள் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட உண்மையான படங்கள். இது எதுவுமே ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டவை அல்ல” என்று கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பில் சாய் பல்லவி எப்போதும் அணிகின்ற கண்ணியமான உடைகளையே அணிந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. அந்தவகையில் சாய் பல்லவி உடை சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.