போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

ஜெகன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஜய், மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் நடிப்பில் 2003ல் வெளிவந்த 'புதிய கீதை' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஹிந்தி நடிகை அமீஷா பட்டேல். தற்போது அவருக்கு 50 வயது ஆகிறது. இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமண ஆசை குறித்து பேசியுள்ளார்.
“தற்போதும் எனக்கு, என்னை விட வயது குறைந்தவர்களிடம் இருந்தும் வயது அதிகமானவர்களிடம் இருந்தும் 'லவ் புரோபோசல்' வருகிறது. என்னை விட இளையவர்களுடன் 'டேட்டிங்' செய்வதில் ஆட்சேபணை இல்லை. காதலுக்கு வயது ஒரு தடையில்லை.
நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஒருவரைத் தீவிரமாகக் காதலித்தேன். எங்களது குடும்பத்தைப் போலவே மிகப் பெரிய தொழில்துறை குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். ஆனால், நான் சினிமாவில் செல்ல முடிவு செய்த போது அவர் அதை விரும்பவில்லை. அவரை விடவும் நான் சினிமாவைத் தேர்ந்தெடுத்தேன். அதனால், அந்தக் காதல் நிறைவேறவில்லை.
எனக்கு சிறு வயதிலிருந்தே டாம் க்ரூஸ் மீது காதல். என் பென்சில் பாக்ஸ், பைல், என் அறை என அவருடைய போஸ்டர்கள் மட்டுமே இருக்கும். அவருக்காக நான் எதையும் செய்வேன். அவருடன் ஒரு இரவு இருக்க முடியுமா என்று கேட்டால், ஆம், முடியும்,” என்று சொல்வேன் எனப் பேசியுள்ளார்.