'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
2025ம் ஆண்டு ஆரம்பத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடம் பிடித்தது. அதன்பிறகு இத்தாலி நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் மீண்டும் அஜித்குமார் அணி மூன்றாம் இடம் பிடித்தது. தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜி.டி-4 கார் பந்தயத்திலும் அஜித் அணி பங்கேற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது அவர் 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பெயரில் ஒரு யுடியூப் சேனல் தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் கார் ரேஸ் போட்டிகளுக்காக தான் பயிற்சி பெறும் வீடியோக்கள், கார் ரேஸ் போட்டிகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பகிர்வதற்கு திட்டமிட்டுள்ளார். இப்படி அஜித்குமார் ஒரு புதிய சேனல் தொடங்கியிருக்கும் தகவல் வெளியானதை அடுத்து ஏராளமானோர் அஜித்குமார் ரேஸிங் சேனலை சப்ஸ்கிரைப் செய்து வருகிறார்கள்.