நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாடலாசிரியர் சினேகன், நடிகை கன்னிகா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். இந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் காதல் மற்றும் கவிதை என்று பெயர் சூட்டினார். அதன் பிறகு தங்களது குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டாலும், அவர்களின் முகத்தை காட்டாத சினேகன், கன்னிகா தம்பதியினர், தற்போது எக்ஸ் பக்கத்தில் தங்கள் இரண்டு குழந்தைகளின் முகத்தை காண்பித்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதோடு, சினேகன் வெளியிட்டுள்ள பதிவில், 'எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும் திரையுலக உறவுகளுக்கும் வணக்கம். எங்கள் இரட்டை மகள்கள் காதல் கன்னிகா சினேகன், கவிதை கன்னிகா சினேகன் இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும். நன்றி என்றும் நட்புடன் சினேகன்' என்று அவர் ஒரு பதிவு போட்டுள்ளார்.