அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை | அதிக சம்பளமா? அதிர்ச்சியான மமிதா பைஜூ | நடிகை ஆன பெண் இயக்குனர் | தியேட்டர் வசூலில் வெளிப்படை தன்மை : நடப்பு தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கோரிக்கை | 'ஜெயிலர் 2' படத்தில் வித்யாபாலன்? | சிரஞ்சீவியின் தெலுங்குப் படத்தில் நடிக்கும் கார்த்தி? |

பாடலாசிரியர் சினேகன் தந்தை சிவசங்கு, 102 வயதில் இன்று(அக்., 27) காலை காலமானார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான பாடலாசிரியர் சினேகன். 500 படங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். இதுதவிர கமலின் மக்கள் நீதி மையம் கட்சியிலும் பொறுப்பில் உள்ளார். இவரது தந்தை சிவசங்கு, தஞ்சாவூர் மாவட்டம், புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். 102 வயதை கடந்த இவர், வயது மூப்பால் காலமானார்.
சிவசங்குவிற்கு 7 மகன்கள், 1 மகள். சினேகன் தான் கடைசி மகன் (8வது பிள்ளை). பாடலாசிரியர் சினேகன் தந்தை மறைவுக்கு பல்வேறு தரப்பினர் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிவசங்குவின் இறுதிச்சடங்கு நாளை(அக்., 28) நடக்கிறது.