பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் |
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் சினேகன். 'யோகி' படத்தின் மூலம் நடிகர் ஆனார். படம் தோல்வி அடைந்ததால் அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. சில ஆண்டுகளுக்கு பிறகு 'உயர்திரு 420' என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். இந்த படமும் வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு சில படங்களில் நடித்தார், சில படங்கள் வெளிவரவில்லை. வெளிவந்த படங்கள் வரவேற்பை பெறவில்லை.
அதன் பிறகு சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தினார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார். இந்த நிலையில் அவர் சின்னத்திரை தொடர் ஒன்றில் நாயகனாக நடிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. 'பவித்ரா' என்ற பெயரில் உருவாகும் இந்த தொடரில் டைட்டில் கேரக்டரில் பவித்ராவாக அனிதா சம்பத் நடிக்கிறார். அவரது ஜோடியாக சினேகன் நடிக்கிறார். இந்த தொடரை பிரியன் என்பவர் இயக்குகிறர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. சினேகன் சின்னத்திரை நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.