சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விஷால் நடித்த 'மதகஜராஜா' படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் வெளியானது. பொங்கல் வெளியீட்டு படங்களில் அதிகமாக வசூலித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்த படத்தின் விழா ஒன்றில் விஷால் கலந்து கொண்டபோது விஷால் மிகவும் தளர்வுடன் காணப்பட்டார். கைகள் நடுங்கியது. பேச முடியாமல் தடுமாறினார்.
இதனால் விஷாலுக்கு என்ன ஆனது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். வைரஸ் காய்ச்சலால் தான் இப்படி ஆனது என்று நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் வெளியானது.
இதையடுத்து விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என்ற மருத்துவ அறிக்கை வெளியானது. விஷாலே தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்திருந்தார். அதையும் தாண்டி விஷால் உடல்நலக்குறைவை மையமாக வைத்து யூகத்தின் அடிப்படையில் பல யு-டியூப் சேனல்களில் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் விஷால் குறித்து தவறான தகவல் பரப்பும் யு-டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் 3 யு-டியூப் சேனல்கள் மீது, அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மீறல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.