சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
கமல்ஹாசனின் டாப் டென் படங்களில் ஒன்று 'தேவர் மகன்'. கமல் திரைக்கதை வசனம் எழுத, பரதன் இயக்கினார். சாதி ரீதியான பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில், பெரும் வெற்றிகண்ட 'தேவர் மகன்' பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி, கமல்ஹாசன், இளையராஜா, பரதன், பி.சி.ஶ்ரீராம் போன்ற ஆளுமைகளுக்கு மத்தியில் பஞ்சவர்ணமாகக் கவனம் பெற்ற ரேவதி, அந்தப் படத்துக்காகத் தேசிய விருதையும் வென்றார்.
ஆனால் பஞ்சவர்ணமாக முதலில் நடித்தவர் மீனா. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் மீனாவின் நடிப்பிலும், தோற்றத்திலும் கமலுக்கு நம்பிக்கை வரவில்லை. 'பஞ்சவர்ணம் அக்ரஹாரத்து பெண்ணல்ல, சாதாரண குடியானவன் பொண்ணு', என்று மட்டும் இயக்குனர் பரதனிடம் சொன்னார் கமல்.
பரதன் உடனடியாக பிரியதர்ஷனின் மலையாள படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த ரேவதியை தொடர்பு கொண்டு அழைத்தார். இயக்குனர் பிரியதர்ஷனும் 'கமல்ஹாசன் ஸ்கிரிப்ட் என்றால் அது உனக்கு முக்கியமான படமாக இருக்கும்' என்று தனது பட கால்ஷீட்களை விட்டுக் கொடுத்து அனுப்பி வைத்தார். படத்தின் பஞ்சவர்ணமாகவே வாழ்ந்தார் ரேவதி. அவருக்கு அந்த ஆண்டுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.