'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

நடிகை மீனா சமீப வருடங்களாக குறைவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்து வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். அந்த சமயத்தில் தான் அவருக்கு ரோஸ்லின் வெப் சீரீஸில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. நேற்று முதல் இந்த வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது, மீனாவுடன் நடிகர் வினீத் இணைந்து நடித்துள்ளார்.
இந்த வெப் சீரிஸை சுரேஷ் நந்தகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ஜித்து ஜோசப்பிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்த ரோஸ்லின் வெப் சீரிஸில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் மீனாவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என அவர் நினைத்தார். ஜீத்து ஜோசப்பின் மனைவி மூலமாக மீனாவிடம் பேசி இந்த கதையை கேட்குமாறு சொல்ல, மீனாவிற்கும் இந்த கதை பிடித்து விட்டது. இந்த கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையையும் கணிசமாக குறைத்து நடித்தார் மீனா என்று இயக்குனர் உமேஷ் நந்தகுமார் கூறியுள்ளார்.




