Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: உள்ளத்தை அள்ளித் தந்த 'சபாஷ் மீனா'

23 மார், 2026 - 10:14 IST
எழுத்தின் அளவு:
Flashback-Sabaash-Meena-and-Ullathai-Allitha
Advertisement


1958ம் ஆண்டு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய படம் 'சபாஷ் மீனா'. இதில் சிவாஜி, சரோஜாதேவி, பி.ஆர்.பந்துலு, மாலினி, சந்திரபாபு, எஸ்.வி.ரங்காராவ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். டி.ஜி.லிங்கப்பா இசை அமைத்திருந்தார்.

ஒரு பணக்காரர் தனது பொறுப்பில்லாத மகனை தனது பணக்கார நண்பன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். ஆனால் மகனோ தன் நண்பனை அந்த பணக்கார வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு அந்த வீட்டிலேயே இவர் வேலைக்காரராக சேர்ந்து கொள்வார். பணக்கார வீட்டு பெண்ணை நண்பரும், இவரும் காதலிக்க அதன் பிறகு நடக்கும் கலாட்டாக்கள்தான் படம்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இது இந்தியில் 'தில் தேவரா தீவானா' என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதையும் பி.ஆர்.பந்துலு இயக்கினார். அங்கும் வெற்றி பெற்றது. 'சிரிகுடுக்கா' என்ற பெயரில் மலையாளத்திலும், 'ஆலியா காலியா' என்ற பெயரில் கன்னடத்திலும் ரீமேக் ஆனது.

படம் வெளியாகி 38 ஆண்டுகளுக்கு பிறகு இதே கதையை சற்று உல்டா பண்ணி, அதிகாரபூர்வமற்ற ரீமேக்காக 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தை இயக்கினார் சுந்தர் சி. பொறுப்பில்லாத மகன் கார்த்திக்கை அவரது தந்தை தனது நண்பன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். அவர் தனது நண்பர் கவுண்டமணியை தனக்கு பதிலாக அனுப்பி வைத்து அதே வீட்டில் இவர் கார் டிரைவராக இருப்பார். பணக்காரர் மகள் ரம்பாவை காதலிப்பார், அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் கதை. சபாஷ் மீனாவில் சிவாஜியின் நண்பர் சந்திரபாபு, உள்ளத்தை அள்ளித்தாவில் கார்த்திக்கின் நண்பர் கவுண்டமணி.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: குறைவான நாட்களில் தயாராகி நிறைவான வெற்றியைப் பதிவு செய்த “முகராசி”பிளாஷ்பேக்: குறைவான நாட்களில் ... பிளாஷ்பேக்: கேரக்டர்களே கதை சொன்ன முதல் படம் பிளாஷ்பேக்: கேரக்டர்களே கதை சொன்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

RRR - Nellai,இந்தியா
24 மார், 2026 - 12:03 Report Abuse
RRR காப்பியடி மன்னன் சுந்தர்.சி பழைய தமிழ்ப்படங்களை காப்பியடித்தே பெயர் வாங்கும் டைரக்டர். இவரது படங்களில் கதை, இசை என்று எல்லாமே அப்பட்டமான காப்பியாகவே இருக்கும்.
Rate this:
சசிக்குமார் திருப்பூர் சபாஷ் மீனா 125 நாட்கள். உள்ளத்தை அள்ளித்தா பல திரையரங்குகளில் ஒரு வருடம்
Rate this:
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
23 மார், 2026 - 11:03 Report Abuse
Columbus In between Sabhash Meena was adapted as Anubavi Raja Anubavi with Muthuraman and Nagesh (double role). In Hindi it became Do Phool and then later Govinda starrer Aankhen. There are very few original stories.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap