பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
தெலுங்குத் திரையுலகத்தில் பான் இந்தியா படங்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தாலே வெளியான முதல் நாளிலேயே 100 கோடி, 150 கோடி வசூல் என சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தப் படங்கள் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமே ஓரளவிற்கு வரவேற்பைப் பெறுகின்றன. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், கர்நாடகாவில் பெங்களூருவைத் தவிர பிற இடங்களிலும் பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை.
இப்படி வெளியாகும் வசூல் விவரங்கள் பெரும்பாலும் தவறான தகவலாகவே இருப்பதாக தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களிலும் தெரிவிக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான 'கேம் சேஞ்ஜர்' படம் முதல் நாளில் 186 கோடி வசூலைப் பெற்றதாக போஸ்டர் வெளியானது. அது உள்ளிட்ட மற்ற சில படங்களின் இப்படியான போஸ்டர்கள்தான் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர்களிடம் வருமான வரி சோதனை நடைபெற காரணமாக அமைந்தது என தகவல் வெளியாகி உள்ளது.
இப்படியான போலி போஸ்டர்களை வெளியிடுவதை தெலுங்கு தயாரிப்பாளர்கள் தவிர்க்க வேண்டும் என்ற குரல் தெலுங்கு சினிமா ரசிகர்களிடமிருந்து எழுந்துள்ளது. ஹீரோக்களுக்கு இடையே உள்ள போட்டியால்தான் இப்படியான போஸ்டர்களை வெளியிடுவதாக திரையுலகினரும் குறைபட்டுக் கொள்கிறார்கள். போலி வசூலில் வந்த போஸ்டர் சண்டை வருமான வரி சோதனையில் வந்து நிற்கிறது.