லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி |
ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி உள்ள படம் கேம் சேஞ்சர். ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் இந்தியன் 3 படத்தை இயக்கி கொடுக்க ஷங்கர் ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் தமிழ்நாட்டில் கேம் சேஞ்சரை வெளியிட விடமாட்டோம் என்று லைகா நிறுவனம் கூறி வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, இந்தியன்- 2 படம் தோல்வி அடைந்து விட்டதால் ஷங்கருக்கு கொடுக்க வேண்டிய 30 கோடி ரூபாய் சம்பள பாக்கியை இதுவரை லைகா நிறுவனம் கொடுக்கவில்லையாம். அதோடு, இந்தியன்- 3 படத்திற்கு மீதம் உள்ள காட்சிகளை படமாக்குவதற்கு மேலும் 50 கோடி செலவாகும் என்று கூறிய ஷங்கர் தனது சம்பளத்தையும் சேர்த்து தந்தால் மட்டுமே இந்தியன் -3 படத்தை முடித்துக் கொடுப்பேன் என்று லைகா நிறுவனத்திடம் கூறிவிட்டாராம்.
இதன் காரணமாக இந்தியன் -3 படத்தை இயக்கிக் கொடுப்பதற்கு ஷங்கர் ஒப்புதல் கொடுக்காதபட்சத்தில் தற்போது அவர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்க கூடாது என்று திரைப்பட கவுன்சிலை அணுகி உள்ளதாம் லைகா நிறுவனம். ஆனால் இதற்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்தியன் 3 படம் என்பது லைகா நிறுவனத்துக்கும், இயக்குனர் ஷங்கருக்கு இடையே உள்ள தனிப்பட்ட விவகாரம். அதை முன்வைத்து அதில் சம்பந்தமில்லாத என்னுடைய படத்தை வெளியிட தடை கோறுவதை ஏற்க முடியாது. கேம் சேஞ்சர் என்னுடைய பணத்தில் தயாரிக்கப்பட்ட படம். அதனால் உங்க இருவர் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட பிரச்னைக்குள் மூன்றாவது நபரான என்னை தேவையில்லாமல் இழுக்காதீர்கள் என்று தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் தில் ராஜு .