தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தையும், கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார். இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியன் 2 படத்தின் சண்டைக் காட்சியை தென்னாப்ரிக்காவில் படமாக்கினார். இதில் கமல், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அதன்பின் கேம் சேஞ்சர் படப்பிடிப்பிற்கு திரும்பினார். இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பை முடித்து விட்டதாக ஷங்கர் அறிவித்துள்ளார். மேலும் இந்தியன்2 பட வேலைகள் நாளை(மே 11) முதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஷங்கர் கூறுகையில், ‛‛கேம் சேஞ்சர் படத்தின் எலெக்டிரிபையிங் கிளைமாக்ஸ் இன்று முடிவடைந்தது. நாளை முதல் இந்தியன்2-வின் சில்வர் புல்லட் சீக்வென்ஸ் மீது கவனம்'' என குறிப்பிட்டுள்ளார்.




