'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 234வது படத்தில் நடிக்கவுள்ளார் கமல். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கதாநாயகியாக நடிக்க நடிகை வித்யா பாலன் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிலம்பரசன் உடன் பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படமும் விக்ரம் படம் போன்று பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்கிறார்கள்.
இதுதவிர கமல் தயாரிக்க உள்ள ஒரு படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார். இதை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.