வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' |
கடந்த 2007ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் சிவாஜி - தி பாஸ். இந்த படத்தில் ஸ்ரேயா, ரகுவரன், விவேக், சுமன், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.வி.எம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் தமிழில் ரூ.100 கோடி வசூலித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தை இப்போது மீண்டும் திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை தற்போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு பதிப்பில் திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.