'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

தமிழ்த் திரையுலகத்தில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன், ரஜினிகாந்த் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். அந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த வாரம் பிப்ரவரி 21ம் தேதி 'க்ளிம்ப்ஸ்' வீடியோ ஒன்றுடன் வெளியிட்டனர்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், படத்தின் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பங்கேற்ற அந்த வீடியோவிற்கு அவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் சில சர்ச்சைக் கருத்துக்களை மற்ற ரசிகர்கள் வெளியிட்டார்கள். அந்த வீடியோவில் சில கிளாமர் பெண்களை எதற்காக அப்படியான ஒரு உடல்மொழியுடன் காட்ட வேண்டும் என்பதுதான் அவர்களது கேள்வியாக இருந்தது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான அந்த வீடியோ, தமிழில் 32 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கில் ஒரு மில்லியனையும், ஹிந்தியில் 2 மில்லியனையும் நெருங்கி வருகிறது.
தமிழில் இதற்கு முன்பு வெளிவந்த 'க்ளிம்ப்ஸ்' வீடியோக்களில் சூர்யா நடித்து வெளிவந்த 'கங்குவா' படத்தின் க்ளிம்ப்ஸ் 40 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. அதன்பின் கடந்த இரண்டு வருடங்களில் வேறு எந்தப் படமும் அதை நெருங்கவில்லை. 'கமல் ரஜினி ரியூனியன்' க்ளிம்ப்ஸ் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.




