விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

சினிமாவில் சில முன்னணி இயக்குனர்களும், சில முன்னணி நடிகர்களும் மற்ற நடிகர்களின் படங்களையோ, வரவேற்பைப் பெற்ற சில படங்களையோ பாலோ செய்திருக்க மாட்டர்கள். அப்படி பார்த்திருந்தால் அவர்கள் பார்க்காமல் விட்ட படங்களின் சாயலை தங்கள் படங்களில் வைக்க மாட்டார்கள். அதை 'விஸ்வநாத் & சன்ஸ்' படக்குழு நிரூபித்துள்ளது.
தெலுங்கில் முன்னணி இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா, ரவீணா டாண்டன், மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வந்த சூர்யாவின் 46வது படத்திற்கு 'விஸ்வநாத் & சன்ஸ்' என்ற தலைப்பை வைத்து முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்கள்.
தோளில் வைத்துள்ள 'பேபி பேக்'கில் ஒரு குழந்தையுடன் சூர்யா நிற்கும் போஸ்டர்தான் அந்த முதல் பார்வையில் இடம் பெற்றுள்ளது. இது போன்ற ஒரு போஸ்டரை கவின் நடித்து 2023ல் வெளிவந்த 'டாடா' படம் படப்பிடிப்பில் இருந்த போதே வெளியிட்டுள்ளார்கள். அதே ஸ்டைலை தற்போது சூர்யா படத்திற்கும் டிசைன் செய்துள்ளார்கள்.
யாருடைய ஆலோசனை என்பது தெரியவில்லை, கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கலாம்.




