ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : தணிக்கை வாரியம் அறிக்கை | திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை | ஜெயிலர் 2 படத்தில் பவன் கல்யாண்? | ‛தி பாரடைஸ்' படத்தில் சுப்பு வேடத்தில் கயாடு லோகர் | ஏப்ரல் 24ல் ‛சிவகாசி' உடன் ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | 75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு' | தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன படங்கள் என்னென்ன தெரியுமா ? | 'துரந்தர்-2 'படத்திற்கு தடைவிதிக்க : நீதிமன்றம் மறுப்பு | அண்ணி மீது ஹன்சிகா வழக்கு | பிளாஷ்பேக் : அபூர்வ சகோதரர்கள் மனோரமாவிற்கு முன் காந்திமதி |

வெங்கி அட்லுாரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் ஜூலையில் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெங்கி இயக்கிய வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியிலும் வரவேற்பு கிடைத்தது. சூர்யாவுக்கு இந்த மொழிகளில் ஒரளவு மார்க்கெட் இருப்பதால் 5 மொழிகளில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியாகும் என தெரிகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் டீசர் விரைவில் வெளியாக உள்ளது. இது சூர்யா நடிக்கும் 46வது படம்.
இதற்கிடையில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரின் 45வது படமான கருப்பு நிலை என்ன? எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கருப்பு படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் ஓடிடி பிஸினஸ், வேறு சில சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. தேர்தல் முடிந்தவுடன் சம்மரில் படம் ரிலீஸ் ஆகும் என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியிருக்கிறார். ஆகவே, ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் கருப்பு வெளியாக வாய்ப்பு.
அதேசமயம் ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பு, கருப்பு படத்திற்கு நெருக்கடியை தந்துள்ளது. ஜூலைக்கு சில மாதங்களுக்கு முன்னதாக கருப்பு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு பெரிய ஹீரோவின் ஒவ்வொரு படத்துக்கு முன்பு 2 அல்லது 3 மாத கால இடைவௌி தேவைப்படுவதால் கருப்பு பட ரிலீஸில் ஏதேனும் மாற்றம் வருமா என கோலிவுட்டில் பேசி வருகிறார்கள். கருப்பு எப்போது ரிலீஸ் என்று கேட்டு சூர்யா ரசிகர்களும் சோர்ந்துவிட்டனர்.