ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா மனதில் தோன்றியதை பட்டென கூறி அடிக்கடி சர்ச்சைகளில் இடம் பிடித்து வருபவர். அப்படி தற்போது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் குறித்தும் ஒரு கருத்தை கூறியுள்ளார். அதற்கு முன்னதாக ஜான்வி கபூர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான தேவரா படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் விழா ஒன்றில் ஜூனியர் என்டிஆர் பேசும்போது, ஒரு சில ப்ரேம்களில் ஜான்வி கபூர் முகத்தில் ஸ்ரீதேவியை நான் பார்த்தேன் என்று கூறியிருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி ராம்கோபால் வர்மா குறிப்பிட்டு பேசும்போது, “எனக்கு ஒன்றும் ஜான்வி கபூர் முகத்தில் ஸ்ரீதேவியை ஒரு சதவீதம் கூட பார்க்க முடியவில்லை. ஸ்ரீதேவியின் தோற்றம் என்பது அவரது நடிப்பாலும் திறமையாலும் வளர்ந்தது. அவரைப் பார்க்கும்போது நான் ஒரு இயக்குனர் என்பதையே மறந்துவிட்டு ஒரு ரசிகனாக மாறி விடுவேன். ஜான்வி கபூருக்கு அந்த அளவிற்கு திறமை இருக்கிறதா என்றால் நான் அம்மாவை தான் விரும்புகிறேன் சரியா ? மகளை அல்ல” என்று கூறியுள்ளார்.