சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாரிசான ஜான்வி கபூர், தற்போது ஹிந்தியில் மட்டுமே நடித்து வருகிறார். அவரைத் தேடி தமிழ், தெலுங்குப் பட வாய்ப்புகள் சென்றாலும் அவற்றைத் தவிர்த்து, ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.
ஜான்வி நடித்து அடுத்ததாக 'மிலி' என்ற ஹிந்திப் படம் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மலையாளத்தில் வந்த 'ஹெலன்' ஹிந்திப் படத்தின் ரீமேக். தமிழில் கூட 'அன்பிற்கினியாள்' என்ற பெயரில் கடந்த வருடம் ரீமேக் ஆகி வெளிவந்தது.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் ஜான்வி. அடிக்கடி கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு லைக்குகளை அள்ளுவார். நேற்று சில கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு, “என்னுடைய அபிமான புதிய கலரைக் கண்டுபிடித்துவிட்டேன் என நினைக்கிறேன், தீபாவளி சீசன்,” எனக் குறிப்பிட்டுள்ளார். புது கலரில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு அந்த ஆடையில் அதற்குள் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளிவிட்டார் ஜான்வி.