பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு |
'16 வயதினிலே' படத்தில் பாவாடை, தாவணி அணிந்து கொண்டு ஸ்ரீதேவி பாடிய 'செந்தூரப் பூவே….' பாடலை இத்தனை வருடங்கள் கழித்து கேட்டாலும் அவ்வளவு புத்துணர்வு கிடைக்கும். பாடலுக்கான இசை, வரிகள், ஸ்ரீதேவியின் புன்னகை முகம், ஒளிப்பதிவு என அந்தப் பாடல் தமிழ் சினிமா பாடல்களில் ஒரு எவர் கிரீன் பாடலாக இருக்கிறது.
அவ்வளவு அழகான ஸ்ரீதேவி அளவுக்கு இல்லை என்றாலும் அவரது அழகில் பாதியாவது இருப்பார் அவரது மகள் ஜான்வி கபூர். தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடி விதவிதமான கிளாமர் புகைப்படங்களைப் பதிவிடுபவர் ஜான்வி. நேற்று வித்தியாசமான பூக்கள் போட்ட புடவை ஒன்றை அணிந்து விதவிதமான போஸ்களில் போட்டோக்களைப் பதிவிட்டிருந்தார். அம்மா ஸ்ரீதேவியைப் போலவே கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பால் வசீகரிக்கிறார் ஜான்வி. அப்புகைப்படங்களுக்கு வழக்கம் போல லைக்குகளை அள்ளி வீசியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
அம்மாவைப் போல தமிழ், தெலுங்கில் நடித்துவிட்டு ஹிந்திப் பக்கம் போயிருந்தால் இந்நேரம் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருப்பார். ஆனால், ஏனோ ஹிந்தியை விட்டு தென்னக மொழிகள் பக்கம் வர மறுக்கிறார்.