என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
'வலிமை அப்டேட், வலிமை அப்டேட்' என ஒரு காலத்தில் கேட்டுக் கொண்டிருந்த அஜித் ரசிகர்கள் தற்போது 'ஏகே 61' அப்டேட் என கடந்த சில நாட்களாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த முறை அவர்களை அதிகம் கேட்க வைக்கக் கூடாது என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இன்று மாலை 'ஏகே 61' பற்றிய அப்டேட் வெளியாகும் என்று தெரிகிறது. 'நேர்கொண்ட பார்வை, வலிமை' படங்களுக்குப் பிறகு வினோத், அஜித் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம். அந்தப் படங்களுக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவை மாற்றிவிட்டு இந்தப் படத்திற்காக மீண்டும் ஜிப்ரான் உடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் வினோத்.
'அசுரன்' படத்திற்குப் பிறகு மஞ்சு வாரியர் நடிக்கும் தமிழ்ப் படம். இதுவரையிலும் 'ஏகே 61' என்றே அழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்திற்கு 'துணிவே துணை' என டைட்டில் வைத்துள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தது.
இன்று தலைப்பு அறிவிப்புடன் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகும் எனத் தெரிகிறது. அதில் படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு இருக்குமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.