ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கலாட்டா செய்தார்கள். பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது அவரது கார் செல்லும் சாலையோரம் நின்றுகொண்டு அவரை நோக்கி, வலிமை அப்டேட் என்று பதாகைகளை காண்பித்தார்கள். அதன் பிறகு கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட சில அரசியல் பிரமுகர்களிடமும் சோசியல் மீடியாவில் வலிமை அப்டேட் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்கள்.
இந்நிலையில் தற்போது அஜித் நடித்துள்ள துணிவு படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக கூறப்படும் நிலையில், அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாகவே அப்படம் குறித்த அப்டேட் கேட்டு சோசியல் மீடியாவில் அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நேரத்தில் புதுச்சேரியை சேர்ந்த ஒரு அஜித் ரசிகர், ‛ஏகே 61' அப்டேட் என்று தனது கையில் பிளேடால் எழுதி அதனை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்களின் இது போன்ற செயலை அஜித்குமார் விரும்புவதில்லை என்பதால் அந்த பதிவை அஜித் ரசிகர்கள் தற்போது நீக்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.