மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

சென்னை : தமிழகத்தில் தியேட்டர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி கொடுங்க என முதல்வருக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வருக்கு பன்னீர் செல்வம் எழுதிய கடிதம் விபரம் வருமாறு : தற்போது மல்டிபிளக்ஸ், மால் மற்றும் தனி தியேட்டர்களுக்கு ஒரே அளவில் மின்சார கட்டணம், சம்பளம் உள்ளிட்ட அனைத்தும் ஒரே வகையில் உள்ளது. எனவே அனைத்தும் தியேட்டர்களுக்கும் ஒரே விதமான கட்டணத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும்.
அதேப்போல் பராமரிப்பு கட்டணத்தையும் உயர்த்தி தர வேண்டும். அதன்படி ஏசி வசதி கொண்ட தியேட்டர்களில் தற்போது வசூலிக்கப்படும் ரூ.4 கட்டணத்தை ரூ.10 எனவும், ஏசி அல்லாத தியேட்டர்களில் வசூலிக்கப்படும் ரூ.2 கட்டணத்தை ரூ.5 ஆகவும் உயர்த்தி தர வேண்டும்.
பெரிய தியேட்டர்களை சிறு தியேட்டர்களாக மாற்ற பொது பணித்துறை அலுவலகத்தில் உரிமம் பெற்றால் போதும் என்ற முறையை கொண்டு வர வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் ‛C' படிவ உரிமையை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதி வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.
நடைமுறை வரும் முன்பே உயர்வு
அதேசமயம் இவர்கள் கோரிக்கை நடைமுறைக்கு வரும் முன்பே பல தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் அதிக பட்ச கட்டணமாக 160 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அது 30 ரூபாய் உயர்த்தப்பட்டு 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் 130 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது, 60 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.
சிறப்பு காட்சிக்கு அனுமதி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தனர். அதை ஏற்று அக்., 21 முதல் 27 வரை சிறப்பு காட்சிகளை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது.