பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! | கமர்ஷியல் படங்களில் உச்சம் தொடுவேன் - திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் | மூன்று மாதம் வெயிலில் நின்று கறுப்பானேன் - 'கொட்டுக்காளி' சாய் அபிநயா | நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் |
இந்தாண்டு தீபாவளி நவ., 24ல் திங்கள் கிழமை வருகிறது. அதையொட்டி இரண்டு படங்கள் நாளை(அக்., 21) தமிழில் வெளியாகின்றன. அந்தவகையில் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ், கார்த்தியின் சர்தார் படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு படங்களை பற்றி சற்றே பார்ப்போம்....
பிரின்ஸ்
நடிகர்கள் : சிவகார்த்திகேயன், சத்யராஜ், மரியா ரியா போஷாப்கா
இயக்கம் : அனுதீப்
இசை : எஸ் எஸ் தமன்
2021ல் தெலுங்கில் ஜதி ரத்னலு படத்தின் மூலம் பிரபலமான அனுதீப் தான் இந்த பிரின்ஸ் படத்தை இயக்கி உள்ளார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, நாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா நடித்து தமிழில் அறிமுகுமாகி உள்ளார். கடலூர் பையன், புதுச்சேரி பொண்ணு இவர்களுக்குள் ஏற்படும் காதல் அதனால் ஏற்படும் பிரச்னைகளை ஜாலியாக சொல்லும் படம் இது. ரொமான்டிக் காமெடி படமாக வந்தாலும் படத்தில் ஒரு செய்தியும் சொல்லி உள்ளனர்.
சர்தார்
நடிப்பு : கார்த்தி ராஷி கண்ணா , ரெஜீஷா, லைலா சங்கி பாண்டே ,முனிஷ் காந்த். ரித்விக்
இயக்கம் : பிஎஸ் மித்ரன்
இசை : ஜிவி பிரகாஷ்
கார்த்தி படங்களில் அதிக பட்ஜெட் எடுக்கப்பட்ட படம் தான் இந்த சர்தார். உளவாளிகள் பற்றிய கதை என்பதால் பிரமாண்டமாக படமாக்கி உள்ளார். தந்தை மகன் என இரண்டு வேடங்களில் கார்த்தி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா நடித்துள்ளனர். நமது ஊரில் நமது மண்ணில் ஒருவன் உளவாளியாக இருந்தால் அவன் எப்படி தோன்றுவான் எப்படி செயல்படுவான் எப்படி அணுகுவான் என்பதை பரபரப்பாக சொல்லும் படம் இது. இதை மேலோட்டமாக கூறாமல் உணர்வுபூர்வமாக கூறியிருப்பது சர்தார்.
இந்த இரண்டு படங்களுக்கும் கணிசமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டில் எந்த படம் மக்கள் மனதை வெல்ல போகிறது என்பது நாளை தெரிந்துவிடும்.