சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரிஷபோப்ஷ்கா கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு இயக்குனர் இயக்கி இருந்தாலும் இந்த படம் நேரடி தமிழ்ப்படம் என சிவகார்த்திகேயன் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் இந்தப்படத்திற்கு மட்டுமல்ல, சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற டாக்டர் மற்றும் டான் என அவரது படங்களுக்கு அடுத்தடுத்து ஒற்றை வார்த்தையில் அதிலும் ஆங்கிலத்திலேயே தலைப்பு வைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிரின்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.. படத்தை புரமோஷன் செய்வதற்கு இது போன்ற எளிமையான டைட்டில்கள் வசதியாக இருக்கின்றது. அவ்வளவுதான்” என்று கூறியுள்ளார்.