'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வந்த படம் ‛டிராகன்'. பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 150 கோடி வசூலித்தது. அதன்பிறகு ‛டியூட்' படத்தை அடுத்து ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்திலும் நடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
இந்த நிலையில் டிராகன் படம் திரைக்கு வந்து நேற்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் இரண்டு டிராகன் இடம் பெற்றுள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‛டிராகன் -2' படம் குறித்த ஒரு அப்டேட் கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அவரை தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து எடுத்துக்கொண்டு புகைப்படத்தை பதிவிட்டு, ‛டிராகன் படம் திரைக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. செல்ப் மேட் ஸ்டார் பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. நாங்கள் இரண்டாவது முறையாக திரும்பி வருவோம்' என்று பதிவிட்டுள்ளார்.




