‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

தற்போது வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. வடசென்னை கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் அவர் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார். அவருடன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி என பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த அரசன் படத்திற்கு பிறகு 'டிராகன்' படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தனது 51வது படத்தில் நடிக்க போகிறார் சிம்பு.
இந்நிலையில் நேற்று (பிப்.,03) சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கும் அஸ்வத் மாரிமுத்து, தான் இயக்கும் எஸ்டிஆர் 51வது படம் குறித்து ஒரு அப்டேட்டையும் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ''பிறந்தநாள் வாழ்த்துக்கள் எஸ் டி ஆர். இந்த வருடம் உங்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. அரசன் படத்திற்கு பிறகு எங்கள் படத்தை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன். சிம்புவின் அனைத்து ரசிகர்களும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஒரு பொழுதுபோக்குப்படம் தயாராக உள்ளது. அந்த படத்தின் தலைப்பு 'ஐ' என்ற எழுத்தில் தொடங்கும் என்று ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.