ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ல் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன், ரகுமான் பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு என குணச்சித்திர நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதில் மதுராந்தகர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ரகுமான் இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் கூறியுள்ளார்.
“25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவல் டிவி தொடராக எடுக்க முயற்சி நடைபெற்றபோது அதில் ஒரு கதாபாத்திரத்தில் நானும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன். துரதிஷ்டவசமாக அந்த முயற்சி நடக்கவில்லை. அதேசமயம் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இயக்குகிறார் என தகவல் வெளியானபோது எப்படியாவது அதில் ஒரு கதாபாத்திரம் நமக்கு கிடைத்து விடாதா என நினைத்திருந்தேன். அதற்கேற்ற மாதிரி மணிரத்னத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
படப்பிடிப்பின்போது நிறைய நடிகர்கள் காம்பினேஷன் கொண்ட காட்சியில் அதிக கதாபாத்திர பெயர்கள் அடங்கிய மிக நீண்ட ஒரு வசனத்தை பெயர் வரிசை மாறாமல் நடந்துகொண்டே பேசி நடிக்க வேண்டி இருந்தது. அதை நான்கே டேக்கில் பேசி முடித்ததும் சுற்றியிருந்த படக்குழுவினர் கைதட்டி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.