ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் தென்னிந்திய மொழி படங்களை, குறிப்பாக தமிழ் படங்களை தொடர்ந்து பார்த்து வருபவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற விக்ரம் படத்தை தற்போது பார்த்துள்ளார் அனுராக் காஷ்யப்.
அதிலும் படம் ரிலீஸாவதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் வைத்த வேண்டுகோளான, “கைதி படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு விக்ரம் படத்தை பாருங்கள்” என்று சொன்னதை கவனத்தில் எடுத்துக்கொண்ட அனுராக் காஷ்யப் முதலில் கைதி படத்தை பார்த்துவிட்டு அதன்பின்னர் விக்ரம் படத்தை பார்த்துள்ளார்.
இந்த இரண்டு படங்களையும் பார்த்த பின்னர் அவர், “உண்மையிலேயே இந்த இரண்டு படங்களையும் ரசித்துப் பார்த்தேன். இந்த யுனிவர்சலில் நானும் ஒரு நபராக இருக்க விரும்புகிறேன்” என்று இதன் அடுத்த பாகத்தில் தானும் நடிக்கவேண்டும் என்கிற தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் அனுராக் காஷ்யப்.