தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, நடிகர் கமல்ஹாசனை சந்தித்தது குறித்து அவரது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இறுதியாக நாங்கள் சந்தித்து விட்டோம். பல தசாப்தங்களாக தனது உற்சாகமூட்டும் திரை இருப்பின் மூலம் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சாத்தியமாக்கிய கமல்ஹாசனுடன் ஒரு அரட்டை. தென்னிந்தியாவில் உள்ள பலதரப்பட்ட திரையுலகினர் ஆராய்வதற்கு அதிகம் உள்ளது. அவரது பெரிய ரசிகன் நான்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 247வது சுதந்திரன தினத்தைக் கொண்டாடும் விதத்தில் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. அதில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார் செட்டி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
'தசாவதாரம்' படத்தில் அமெரிக்க அதிபர் கதாபாத்திரம் ஒன்றிலும் கமல்ஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.