சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் | ‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு |
எண்பது தொண்ணூறுகளின் காலகட்டத்தில் தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து வெற்றிகரமாக நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். இடையில் சினிமாவை விட்டு விலகியவர் 14 ஆண்டுகளுக்கு பின் தற்போது ‛சாமானியன்' என்கிற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகவே தனது பயணத்தை துவக்கியுள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளநிலையில் தனது அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார்.
7 ஆத்ரி பிலிம் பேக்டரி சார்பில் தீனதயாளன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் ராமராஜன். இது அவரது 46 ஆவது படமாக உருவாகிறது. சாமானியன் படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் இந்த படத்தின் கதையை எழுதி உள்ளதுடன் இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். தயாரிப்பாளர் மதியழகன் இப்படம் மூலம் வில்லனாக நடிகராக களமிறங்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.
இயக்குனர் கார்த்திக் குமார் கூறும்போது, “சாமானியன் படத்தின் கதை என் வாழ்க்கையில் 2018ல் நான் சந்தித்த வலியை மையப்படுத்தி உருவானது. அந்த படத்திற்கு ராமராஜன் பொருத்தமாக இருந்தார். ஆனால் இந்த புதிய படத்திற்கு ராமராஜனை மனதில் வைத்தே கதையை உருவாக்கி உள்ளேன். இப்போது மக்களில் பலரும் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டது தான் இந்த கதையும். ஆனால் சாமானியன் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இரண்டும் வெவ்வேறாக இருக்கும்..
ராமராஜன் இதுநாள் வரை பார்த்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு ஒரு சாதாரண வழக்கறிஞர் ஆக நடிக்கிறார். நான் இயக்குனர் ஷங்கரின் தீவிரமான ரசிகன். அவரது படங்கள் அனைத்திலும் ஒரு சமூக அக்கறை இருக்கும். அதே போன்று சமூக அக்கறை கொண்ட கதைகளை உருவாக்கி வருகிறேன். ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை முழு வீச்சில் துவங்க இருக்கிறோம். கதாநாயகியாக நடிக்க மீனா போன்ற முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.