பிளாஷ்பேக்: சபதத்தை நிறைவேற்றிய ராமராஜன் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் படத்தில் நடித்த நம்பியார் | 'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் |
ராமராஜன் இயக்குனராக இருந்த காலத்தில் அவர் இயக்கிய இரண்டாவது படம் 'மருதாணி'. இந்த படத்தில் நாயகியாக கனகாவை அறிமுகப்படுத்த விரும்பினார் ராமராஜன். இதற்காக அவரது வீட்டுக்கு சென்று கனகாவின் அம்மா மாஜி நடிகை தேவிகாவிடம் கதை சொல்ல சென்றார். ஆனால் தேவிகா கதைகேட்க கூட மறுத்து விட்டார். "என் மகளுக்கு 11 வயதுதான் ஆகிறது. அவளை ஒரு பெரிய இயக்குனர் மூலம், பெரிய படத்தில்தான் நடிக்க வைப்பேன்" என்று கூறிவிட்டார்.
இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினார் ராமராஜன். பின்னர் அந்த படத்தில் ஷோபனா நடித்தார், பாண்டியன் நாயகனாக நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றது. பின்னர் ராமராஜன் நடிகர் ஆனார். அதிலும் வெற்றி பெற்றார்.
அதன் பிறகு 'கரகாட்டக்காரன்' படத்திற்கு ஆடிசன் நடந்தபோது தேவிகாவே ராமராஜனை தொடர்பு கொண்டு தனது மகளை நடிக்க வைக்குமாறு கேட்டார். ஆனால் 'இந்த படத்தின் நாயகிக்கு கரகாட்டம் ஆடத் தெரிய வேண்டும் உங்கள் மகள் சரிப்பட்டு வரமாட்டார்' என்று கூறிவிட்டார் ராமராஜன். அவளுக்கு நான் ஆள் வைத்து ஆடக் கற்றுக் கொடுக்கிறேன் என்றார் தேவிகா. அதன்பிறகு 'கரகாட்டக்காரன்' படத்தில் அறிமுகமானார் கனகா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 'தங்கமான ராசா' என்ற அடுத்த படத்திலும் ராமராஜன் ஜோடியாக நடித்தார் கனகா.